Wednesday, August 26, 2020

Tamil Nadu Citizen Portal - பொது மக்களுக்கான இணையதளம்

CCTNS – பொது மக்களுக்கான இணையதளம்;  :-

(Citizen Portal)

இணையதள முகவரி :-

Web site Address :- https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index 



ONLINE SERVICES TO PUBLIC

Sl.No.

Public Services

1

Contact Directory

2

Register Online Complaints

3

Online Complaints Status

4

FIR View

5

FIR and CSR Status

6

Vehicle Status

7

Missing & Un –identified Dead Body search

8

Road Accident Documents Download

9

Lost Document Report

10

Police Verification Services

11

TN Police citizen service

 

I.                 Contact Directory :-

பொதுமக்கள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் தொலைபேசி எண்களை அறிந்து கொள்ள மேற்படி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

II.               Register Online Complaints :-

பொதுமக்கள் தங்களது புகார்களை இணைய தளம் வாயிலாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு புகார் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம்;.

 

III.              Online Complaints Status :-

பொதுமக்கள் தாங்கள் கொடுத்த Online-புகார் மனு சம்மந்தமான தற்போதைய நிலை தெரிந்து கொள்ளலாம்.  மேலும் புகார் அளிக்கும் போது பதிவு செய்யும் அலைபேசி எண்ணிற்கு விசாரணை முடிவு விபரங்கள் குறுந்தகவலாக (Enquiry disposal details -Message) அனுப்பி வைக்கப்படும்.


 

 

IV.             FIR View :-

காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையினை பொதுமக்கள் பார்த்துக் கொள்ளவும் தரவிறக்கம் செய்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்படி வசதிக்கு பொதுமக்கள் தங்களது அலைபேசி எண்ணை பதிவு செய்ய வேண்டும். மேற்படி அலைபேசி எண்ணிற்கு ரகசிய குறியீடு அனுப்பி வைக்கப்படும் (One Time Password – OTP). மேற்படி ரகசிய குறியீட்டினை பயன்படுத்தி தமிழ்நாட்டில் எந்த ஒரு காவல்நிலைய வழக்கின் முதல் தகவல் அறிக்கையினையும் தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம். (குழந்தைகள் மற்றும் மகளிர் சம்மந்தப்பட்ட வழக்குகள், இந்திய நாட்டு இறையாண்மை சம்மந்தப்பட்ட வழக்குகளை பார்க்க இயலாது).

 

V.               FIR and CSR Status :-

காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும்  FIR & CSR ஆகியவற்றின் தற்போதைய நிலை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

 

VI.             Vehicle Status :-

பொதுமக்கள் பழைய வாகனங்கள் வாங்கும் போது மேற்படி வாகனம் ஏதாவது வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளதா என்று  அறிந்து கொள்ள மேற்படி சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

VII.            Missing & Un –identified Dead Body search :-

பொதுமக்கள் தங்களது பகுதிகளில் காணாமல் போன நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிரேதம் சம்மந்தமாக தமிழ்நாட்டில ஏதாவது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என்று தெரிந்து கொள்ளவும், அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருந்தால் சம்மந்தப்பட்ட காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் பயன்படுகிறது.

 

VIII.         Road Accident Documents Download:-

வாகன விபத்துகளில் இறந்து போனாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ மேற்படி விபத்து சம்மந்தமாக MCOP நீதிமன்றத்தில் ஆவணங்களை சமர்ப்பிக்க மேற்படி சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்படி சேவையானது புகார்தாரர், விபத்தில் காயம் அடைந்தவர், விபத்தில் இறந்து போனவரின் சட்டப்படியான வாரிசுதாரர்கள் மற்றும் எதிரி ஆகியோர் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். மேற்படி சேவையை பயன்படுத்த சம்மந்தப்பட்ட நபர்களின் அலைபேசி எண்கள் மேற்படி வாகன விபத்து சம்மந்தமான வழக்கில் உள்ளீடு செய்திருக்க வேண்டும். மேலும் மேற்படி சேவையின் மூலம் தரவிறக்கம் செய்யப்படும் ஒவ்வொரு ஆவணத்திற்கும் ரூ. 20,- கட்டணமாக அவர்களது சூநவ Net Banking Account மூலம் வசூலிக்கப்படும். 

 

சாலை விபத்து வழக்குகளில் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள சேவை :-

 

1)     காவல்நிலையங்களில் பதிவு செய்யப்படும் சாலை விபத்து வழக்குகளில் புகார்தாரர், பாதிக்கப்பட்டவர் மற்றும் எதிரி ஆகியோரின் அலைபேசி எண்களை CCTNS Application - ல் உள்ளீடு செய்யப்படுகிறது.

 

2)  சாலை விபத்து வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் முன்னர் சம்மந்தப்பட்ட வாகனங்களின் ஆவணங்கள் உள்ளீடு செய்யப்படுகிறது.

i) வாகன பதிவு சான்றிதழ் ; (Registration Certificate)

ii) ஓட்டுனர் உரிமம்; (Driving License)

iii) காப்பீடு சான்றிதழ்; (Insurance Certificate)

iv) வாகன அனுமதி சான்றிதழ்; (Permit)

v) வாகன தணிக்கை சான்றிதழ்; (MV Report)

vi) காயச்சான்றிதழ் / பிரேத பரிசோதனை அறிக்கை  (Wound / Postmortem Certificate)

 

3)     சாலை விபத்து வழக்கில் அலைபேசி எண்கள்  உள்ளீடு செய்யப்பட்டவர்கள் மட்டுமே சாலை விபத்து தொடர்பான ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய  முடியும்.  மற்றவர்கள் உபயோகப்படுத்த முடியாது.

 

4)    ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index  என்ற இணையதள வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

5)     மேற்படி இணையதள சேவையின் மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கு ஒரு ஆவணத்திற்கு ரூபாய் 20/- என்ற அடிப்படையில் Net Banking சேவை மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

IX.       Lost Document Report:-

காணாமல் போன ஆவணங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான இணைய தள வசதி:-

 

பொதுமக்கள் தங்களுடைய 1) அடையாள அட்டை

2) பள்ளி , கல்லூரி சான்றிதழ்

3) ஓட்டுனர் உரிமம்

4) பாஸ்போர்ட்

5) வாகன பதிவு சான்றிதழ்

ஆகியவை தொலைந்து போய் விட்டால் https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Index என்ற இணையதள வசதி மூலம் இலவசமாக புகார் பதிவு செய்து கொள்ளலாம். மேற்படி புகார் பதிவு செய்யும் போது உறுதி தன்மைக்காக அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணங்களில் (Govt., Issued Photo IDs)  ஏதேனும் ஒன்றினை உள்ளீடு செய்ய வேண்டும். (.தா. ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை). புகார் பதிவு செய்வதற்கான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டவுடன், தொலைந்து போன ஆவண அறிக்கை (Lost Document Report- LDR) தனித்துவமான குறிப்பு எண்ணுடன் பயனீட்டாளருக்கு அளிக்கப்படும்.

 

மேற்படி இணையதள சேவையின் மூலம் ஆவணங்களை பதிவிறக்கம் செய்வதற்கு ஒரு ஆவணத்திற்கு ரூபாய் 20/- என்ற அடிப்படையில் Net Banking சேவை மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

X)    Police Verification Services:-

காவல் துறை முன்நடத்தை சரிபார்ப்பு சேவை கீழ்கண்ட காரணங்களுக்காக

விண்ணப்பிக்கலாம்.

. தனிநபர் விவரம் சரிபார்ப்பு

. வேலை நிமித்தமான சரிபார்ப்பு

. வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு

. வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு

 

XI)    TN Police citizen service:-

 

மேற்படி சேவையினை பொதுமக்கள் தங்களது அலைபேசியானது இணையதள வசதியுடன் இருந்தால் Play Store – TN Police citizen service என்ற Application தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment

  CCTNS Related Web Address 1) CCTNS Officers Portal https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/Login https://10.236.242.44/CCTNSNICS...